×

×

சங்க இலக்கிய பெயர்கள்... செந்தமிழ்ப் பெயர்கள்... புதுப் பொலிவுடன்

60465 க்கும் அதிகமான புதிய பெயர்கள்...

"செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு!"

- பாவலர் சுரதா

இந்த வலைத்தளத்தைப் பற்றி

எங்கள் வலைதளத்திற்கு வரவேற்கிறோம். குழந்தைக்குத் தமிழ் பெயர் இட வேண்டும் என்ற உங்கள் அவாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும். குழந்தைக்கு பெயர் மிக முக்கியமானது. பெயர் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கும். அது அவர்களின் அடையாளமும் கூட.

இந்த வலைதளத்தின் நோக்கம், குழந்தைக்குச் சிறந்த தமிழ் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்கு உதவுவதாகும். தமிழ்பெயரி வலைதளத்தில் தமிழ் பெயர்களை அவற்றின் அர்த்தத்துடன் சேகரித்து, சேர்த்துள்ளோம். ஆண் மற்றும் பெண் குழந்தைப் பெயர்களின் பெரும் சேகரிப்பு இது. தொன்மையான, அரிய மற்றும் புதுமையான பெயர்களும் இதில் உள்ளன.

இந்த பெயர் பட்டியல் அகரவரிசைப்படியும், வெவ்வேறு தலைப்புகளின் படியும் தொகுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களும் தங்களுக்குப் பிடித்த பெயர்களை இதில் சேர்க்கலாம். உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் இடுங்கள். அந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்த்துகள்.