×

×

அங்கயற்கண்ணி- aṅkayaṟkaṇṇi

Female பெண் 1  
பொருள்:

அழகிய மீன் போன்ற கண்களையுடையவள், அழகிய மீன் போன்ற கண்களையுடையவள்

விளக்கம்:

“இயற்கையிலேயே பேரழகு வாய்ந்தனவும், திவ்வியமானவையும், அறிவுக்கும் எட்டாததும், எல்லாப் பொருள்களிலும் மேலானதும், பரம மங்களமானதுமாகிய உனது திருவடித் தாமரை களை மயக்கம் நிறைந்த மனத்தவன் ஆகிய என் மேல் கொண்ட கருணையினால் நீ எழுந்தருளி வந்து எனக்குக் காண்பித்தாலும்,  ஐயகோ, எந்தக் கண்களினால் நான் அவற்றைத் தரிசித்து உள்ளம் குளிர்வேன் அங்கயற்கண்ணி அம்மையே,” எனப் பரிதவிக்கிறார்.

செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்

            அறிவிக்கும் சேய ஆகிப்

பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும்

            மேலாம்உன் பொற்றாள் பூவை

 மையார்ந்த மனத்தடியேன் பால்எழுந்த

            கருணையினால் வந்து காட்டின்

ஐயோநான் எவ்விழியால் கண்டுமனம்

            குளிர்வேன் அங்கயற்கண் அம்மே

கருத்துக்கள்(0):