பொற்பூங்கொடி- poṟpūṅkoṭi
திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின.
திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின. திருவிற்கோர் என்பதூஉம் பாடம். இனி பூங்கொடி ஒருத்தி திரு. முருகன், காமன், இறைவன் ஆகியோற்கு வடிவினாலேயே பகைத்தியாயினாள்; எனக்கு உயிர்க்கே பகைத்தியாயினாள் என்றுமாம். திருவிற்கும் கற்பகத்தெரியலாகிய மாலையணியும் இந்திராணி முதலிய வானவ மகளிர்க்கும் அழகிற்கொரு விளக்கமாக அமைந்த கேமசரி எனினும் பொருந்தும். பூங்கொடி : கேமசரி. இறைவன் - சிவபெருமான். பகைத்தி - பகைமை யுடைவள்.
திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா
ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி
முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை
யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.
கருத்துக்கள்(0):