கார்குழலி- kārkuḻali
பொருள்:
உலகம் வியக்கும் கருநிற அழகி, மழை மேகம் போல்கருத்த முடியுடைய பெண்
விளக்கம்:
நந்தவனச் சோலையிலே
நங்கையவள் இயற்கையின்
அழகை ரசித்து
உருகும் வேளையிலே... !
தூரத்தில் நின்ற
மயூரக் கூட்டங்கள்
எல்லாம் காற்றில்
அசைந்தாடும் அவளது
கார்குழலைக் கண்டு
மழையைப் பொழிவிக்கத்தான்
கார்மேகம் ஒன்று
திரண்டு போகிறதென்று
கருதி மகிழ்ச்சியோடு
வண்ணத் தோகையை விரித்தாடத் துவங்கியனவே....!
கருத்துக்கள்(0):