ஆதிரையான்- ātiraiyāṉ
முதலில் அறியப்பட்ட தலைவன், கடவுள் அல்லது சிவன் எனப் பொருள் தரும்.
சிவனை திருவாதிரை என்ற மீன் கூட்டத்தோடு தொடர்பு படுத்தி ஆதிரை முதல்வன், ஆதிரையான் எனத் தமிழர்கள் அழைத்தனர்.
"அரும்பெறல் ஆதிரையான்" -- கலித்தொகை, 150:20
"ஆதிரை முதல்வளற் கிளந்த" -- பரிபாடல், 8:6
திரையன் என்ற சொல்லுக்கு தலைவன் என்ற பொருளும் உண்டு.
வானக்கடலில் சிவந்த மீனை திரையன் என்றே அழைத்தனர்.
மீன்களுக்கு தலைவனாக ஆதிரையன் கருதப்பட்டான்.
ஆ என்ற சொல் முதலில் அல்லது தொடக்கம் என்ற பொருளைத் தருவதாகும்.
ஆதிரையான்: என்பது முதலில் அறியப்பட்ட தலைவன், கடவுள் அல்லது சிவன் எனப் பொருள் தரும்.
முதல் சித்தனாக அறியப்பட்டவரும் சிவனே.
வானவியல் கொள்கையை(விண்மீன்) மக்களுக்கு உணர்த்தியவரும், காலம்(Time) என்ற கருதுகோளை நடைமுறைக்கு கொண்டுவந்தவரும் ஆதிசித்தன் சிவனே.
ஆதிரையனில் திருக்குறளில் சிவன் என்ற தலைப்பு இதனை விளக்குகிறது
மார்கழித் திங்களில் ஒளிரும் சிவந்த உடுவான ஆதிரையையும், ஆதிசித்தனையும் பெருமை படுத்த ஆதிரை நன்னாள் கடைபிடிக்கப்பட்டது.
ஆதிரையனை, ஆருத்திரன் என சமசுகிருதம் திரித்துக்கொண்டது.
திரையன் என்ற சொல், ருத்திரன் எனத்திரிந்து, சிவனை ருத்திரனாக ஆரியம் கற்பித்துக்கொண்டது.
ஆ-ருத்ரா : தமிழில் சொல்லப்பட்ட மூல முதல்வன் என்ற பொருளே சமசுகிருத சொல்லுக்கும் அறியப்படும்.
தமிழையும், சிவனையும் பிரிக்க முடியாது.
கருத்துக்கள்(0):